பரியேறும் பெருமாள் BA BL.
பரியேறும் பெருமாள் BA BL – மேல ஒரு கோடு “உன் பேர் என்ன ? “ – நாம், அன்றாடம் அதிகம் எதிர்கொள்ளும் இந்த கேள்வி மிக சாதாரணமாகத் தோன்றினாலும், அது கேட்கப்படும் இடம் அதன் தீவிரத்தை முடிவு செய்கிறது. புதிதாய் சேர்ந்த பள்ளியில், பூங்காவில் ஒரு குழந்தையிடம், நேர்முகத் தேர்வில், காவல் நிலையத்தில் [ இரவில் ! ], நீதிமன்றத்தில் என மாறும் அர்த்தங்களை விடுவோம் – இதுவே, பற்றியெரியும் கலவரத்தின் நடுவில், ஆயுதம் ஏந்திய ஒரு கூட்டத்தில் பிடிபட்டுக் கேட்கப்பட்டால்.. – “ஃபிராக்” திரைப்படத்தில் அப்படி ஒரு கலவர தருணத்தில் பிடிபடும் ஐந்து